இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணியை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தி அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டமாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஒரு சில பிரபலங்கள் அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் 7ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகின்றது.