Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது பேட்டிங் மாற்றத்திற்கு இவரே காரணம்: சேவாக்..!!

எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் அறிவுரையே காரணம் என இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ சார்பாக விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் , இந்நாள் வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் மன்சூர் அலி கான் பட்டோடியின் ஏழாவது நினைவு தினத்தையொட்டி சேவாக் உரையாற்றினார். அதில், ” பட்டோடி நினைவு தினத்தில் உரையாற்றுவதை நான் தவறவிட விரும்பவில்லை.

ஏனென்றால் எனக்கும் பட்டோடிக்கும் மிக நெருங்கிய உறவு உள்ளது. நான் அவர் ஆடிய வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். எனது ஆட்டம் குறித்து யார் அறிவுரைக் கூறினாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் பட்டோடியின் அறிவுரையால்தான் எனது டெஸ்ட் பேட்டிங் மாற்றம் அடைந்தது. அவரின் அறிவுரை எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.

கடைசியாக முன்னாள் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் அருண் ஜெட்லி வீட்டில் பட்டோடியை சந்தித்து பேசினேன். டெல்லி கிரிக்கெட் வளர்ச்சிக்காக சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம்” என்றார். மேலும், ”இன்னும் சில நாட்களில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள 19 வயதுக்குட்ப்பட்டோருக்கான உலகக்கோப்பையில் வெற்றிபெற ப்ரியம் கார்க் தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துகள்” எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |