இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11-ம் தேதி முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றார். அதன் பிறகு துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் முதல்வராகவும், 6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள நிலையில், 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற ஜெயராம் தாக்கூர் தன்னுடைய கடமையை பொறுப்புடன் செய்வதாக உறுதி அளித்ததோடு, தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.