கோவையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி கைது செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.
இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தான் தொடர்ந்து கட்சியில் இருப்பதாக கூறி ஏமாற்றியதாகவும், அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை முதல் அவரது வீட்டில் விசாரணை நடத்தி வந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.