அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு மாநில கட்சி, நான் தனித்து நின்று எந்த பயனும் அல்ல, ஏனென்றால் நமக்கு பிரதம மந்திரி வேட்பாளர்கள் யாரையும் சொல்ல முடியாது. அதனால் இந்தியாவின் பிரதமரை உருவாக்குகின்ற அணியை போன்ற செயல்பாட்டில் நாம் இருக்க வேண்டும் என்றால், இரண்டு தேசிய கட்சியில் ஒரு கட்சியோடு தான் நாம் கூட்டணி அமைப்போம்.
அதனால் பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற பொது தேர்தல் வரலாம். நமது பங்காளிகள் பற்றி கவலைப்பட வேண்டும். அவர்கள் செய்த வினைக்கு அவர்களே வினை அறுப்பார்கள். நாம் தர்மத்தின் வழியிலே செல்பவர்கள். தொடர்ந்து நாம் சிறப்பான பயணித்து, அம்மாவின் ஆட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு வர நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
நமது இயக்கம் சோழ மண்டலத்திலும், பாண்டிய மண்டலத்திலும் தான் வலுவாக இருப்பதாகவும், இங்கே தொண்டை மண்டலத்திலும், கொங்கு மண்டலத்திலும் நமக்கு ஒன்றுமே இல்லை என்று பலர் கேலி பேசுகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில், பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ்நாட்டிலே எல்லா பகுதிகளிலும் இந்த இயக்கம் செல்வாக்கு மிக்க இயக்கம், பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற பணியில் ஒரு அணியை போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டது என்பது நிரூபிக்கின்ற வேலை வந்துவிட்டது.
டிடிவியை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர்கள் நீங்கள், அதே போல டிடிவி வெற்றி சின்னம் குக்கர் என்பதையும் நீங்கள் பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். அப்படியானால் அமமுக பாஜக அல்லது காங்கிரசோடு கூட்டணி வைப்பதை சூசகமாக டிடிவி தெரிவித்து விட்டார்.