Categories
தேசிய செய்திகள்

விசா காலம் எப்பவோ முடிஞ்சிட்டு… சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை… நைஜீரியாவை சேர்ந்த இருவர் அதிரடி கைது…!!

வீசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்து போதைப் பொருட்களை விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டை சேர்ந்த இருவர் போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்திய குற்றவியல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்ததில் அங்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனையடுத்து அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் நைஜீரியா நாட்டில் வசித்து வரும் வின்சன்ட் யாஜிமோபர் மற்றும் ஜான்யக்வாத் போன்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் தங்களின் வீசா காலம் முடிவடைந்த பின்னரும் பெங்களூருவில் தங்கி இருந்து சட்டவிரோதமாக போதைப் பொருட்களை விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 115 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் கன்னட நடிகைகள் சஞ்சனா, ராகினி போன்றோர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அதே வழக்கில் நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |