கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பொருளாதார நடவடிக்கையாக கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்கள் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர், இந்திய குடியுரிமை பெற்றவர்கள் வர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.