வயர் இல்லாமல் பல போன்களுக்கு சார்ஜ் போடும் வசதியை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நாம் நம் செல்போன்களுக்கு வயர் மூலமாக தான் சார்ஜ் ஏற்றி வருகிறோம். இந்த சமயத்தில் நமக்கு அவசர தேவைகள் இருந்தாலும் சார்ஜ் ஏறுவதால் நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் வயர் இல்லாமல் ஒரே நேரத்தில் பல போன்களுக்கு தானியங்கியாக சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல ஸ்மார்ட்போன்னில் விளையாடும்போது ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் போனை எந்தவிதமான நிலைப்பாட்டிலும் வைக்க வேண்டியதில்லை. ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.