Categories
மாநில செய்திகள்

“இந்த 6 மாவட்டத்திற்கு மட்டும் அனுமதி”… தமிழக அரசு அதிரடி..!!

சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம், மதுரை தாலுகாவிலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில்,  தமிழகத்தில் சில இடங்களில் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்

பெரியகலையம்புதூர், உள்ளகம்பட்டி, ஏ.வெள்ளோடு;

கிருஷ்ணகிரி மாவட்டம்: 

காவேரிபட்டினம், அலிசீபம், செம்படமுத்தூர், குப்பாச்சிபாறை.

தேனி மாவட்டம் பல்லவராயம்பட்டி;

திருப்பூர் மாவட்டம்: அழகுமலை;

புதுக்கோட்டை மாவட்டம்: விராலிமலை (அம்மன்குளம்);

சிவகங்கை மாவட்டம்: சிரவயல், கண்டிபட்டி, குன்றக்குடி

ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |