Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு….. தேர்வு முறையில் புதிய மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரே புத்தகம் என்ற முறை இருந்ததால் மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமானதோடு படிப்பு சுமையும் அதிகமாக இருந்தது.‌ ஆனால் புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்களின் புத்தக சுமை குறைந்ததோடு அவர்களுக்கு மன அழுத்தமும் குறைந்தது. மாணவர்களுக்கு 3 பருவங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு பருவ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறையானது தற்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அதாவது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக அலகு தேர்வுகள் மற்றும் பருவ இறுதி தேர்வுகள் நடைபெற்றது. 10 வருடங்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்ட அலகு தேர்வு மற்றும் பருவ தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக ஒரு தனி குழுவை நியமிக்க இருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்வுகளின் மூலம் எந்த ஒரு மாணவர்களும் தேர்ச்சி இல்லை என்ற சூழல் உருவாகாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். ‌

Categories

Tech |