ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரின் நாகநாதன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மஞ்சூர் பகுதியில் உள்ள மதுரை நெடுஞ்சாலையில் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் நாகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா டிராக்டர் ஓட்டி வந்த தினேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.