Categories
உலக செய்திகள்

60 வருடங்களில் முதல் தடவை… பிரிட்டன் மகாராணியின்றி நடந்த நாடாளுமன்ற விழா…!!!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த 60 வருடங்களில் முதல் தடவையாக வயது முதிர்வு காரணமாக நாடாளுமன்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 வருடங்கள் நிறைவடையவிருக்கிறது. இதனை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பிற்கு பின் அவரின் உடல் நலம் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது.

எனவே, அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 60 வருடங்களில் முதல் தடவையாக மகாராணியின்றி பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியிருக்கிறது. மகாராணியாரின் இடத்தில் இளவரசர் சார்லஸ் அமர்ந்து  விழாவை நடத்தியிருக்கிறார்.

பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற தொடக்க விழாவில் மகாராணி உரையாற்றுவது தான் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை மகாராணி கலந்து கொள்ளாததால் அவரின் மகனான இளவரசர் சார்லஸ் உரையாற்றி இருக்கிறார். அவரின் அருகே மகாராணியின் கிரீடத்தை வைத்திருந்தார்கள்.

மேலும், இளவரசர் சார்லஸ் உரையாற்றும்போது மகாராணியின் அரசு இதனை மேற்கொள்ளும் என்று தான் கூறினார். இதற்கு முன்பு மகாராணி கடந்த 1959 மற்றும் 1963 ஆகிய இரு வருடங்கள் மட்டும் தான் நாடாளுமன்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டதில்லை. அந்த இரு முறையும் அவர் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |