Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டை பூட்டி வெளியூர் சென்ற குடும்பத்தினருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… உறவினரே செய்த சதி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து 8½ பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் விருதுநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரவிசந்திரன்  தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 8½ பவுன் நகை காணாமல் போயிருந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் ரவிச்சந்திரனின் உறவினர் கணேஷ் பாண்டியன்(30) நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |