தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி உயர் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்க கல்லூரிகளுக்கு புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தன்னாட்சி அதிகாரத்தை பெற விரும்பும் கல்லூரிகள் இனி நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு கல்லூரி குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.
அதன் பிறகு என்பிஏ கமிட்டியின் ஏ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதனையடுத்து தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் புதிய படிப்புகளை பல்கலைக்கழகத்தின் அனுமதி இன்றி தொடங்கிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், 500 கல்லூரிகள் நாடு முழுவதும் தன்னாட்சி பெற்று செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாக தாகும்.