ஒரு குட்டி கொரில்லா குரங்கு வைக்கோல் குவியலில் குதித்து ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குட்டி கொரில்லா ஒன்று சிறிய சுவர் மீதி ஏறி நின்று கொண்டு வைக்கோல் குவியலில் மீது மீண்டும் மீண்டும் குதித்து ஜாலியாக விளையாடுகிறது. தொடர்ந்து அப்படி செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த அதன் தாய் கொரில்லா குறும்புக்கார குட்டியை அலேக்காக விளையாடியது போதும் வா என தூக்கிச் சென்று விடுகிறது.
இந்த வீடியோவை பதிவிட்டு “நம் அனைவருக்கும் உள்ள குழந்தைகளுக்காக என குறிப்பிட்டுள்ள ஐஏஸ் அதிகாரி, மூன்றாவது முறை தாவுவதையும், பின்னர் நடப்பதையும் பாருங்கள்” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த கொரில்லா குட்டியை பார்க்கும்போது தங்கள் சிறுவயதில் இதே போல் குதித்து விளையாடியது நினைவுக்கு வருவதாக பதிவிட்டு வருகின்றனர்.
For the child in all of us 😝 Do watch the third jump and then the boss spoils the fun 😊
#WildlifeConservation
VC. Via Whatsapp pic.twitter.com/VK9cDEc82t— Supriya Sahu IAS (@supriyasahuias) March 2, 2020