கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூட தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் நடந்த தேர்வில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு எழுத இயலாத மாணவர்களுக்கு நவம்பர் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஒரு மணி நேர தேர்வு நடைபெறும் என ஒவ்வொரு பாடப் பிரிவு மாணவர்களும் தனித்தனியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.