Categories
மாநில செய்திகள்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு…. ரூ.10000 சம்பள உயர்வு – தமிழக அரசு அதிரடி…!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.7,700 இல்  ரூ.10000 ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக அரசு தேர்தல் பரப்புரையில் நலத்திட்ட உதவிகளை மக்களை ஈர்க்கும் வண்ணம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2009ஆம் வருடம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உடற்கல்வி, ஓவியம் இசை, வாழ்க்கை கல்வி ஆகியவற்றை பயிற்றுவிக்கும் 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் அவர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுடைய மாத ஊதியத்தை 7,700 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |