Categories
தேசிய செய்திகள்

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு… ரூ. 5 லட்சம் கடன்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.!!

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் கடனாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமெடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாத காரணத்தினால் ஊழியர்கள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனாவை சமாளிக்க ரூபாய் 50,000 கோடி நிதியை அவசரகால மருத்துவ சேவைக்காக ஒதுக்கீடு செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கொரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனிநபர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனவும், மாத சம்பளம் பெறுவோர், இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்று பொதுத்துறை வங்கிகள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |