திருமண உதவி தொகைக்கு ரூ2,000 லஞ்சம் கேட்ட பெண் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எறய சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாலினி என்பவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ் 4 கிராம் தாலிக்கு தங்கமும், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணமும் பெறுவதற்காக ஒன்றிய ஊர் நல அலுவலக அதிகாரியான ஷெரின்ஜாய் என்பவரிடம் விண்ணப்பித்து இருந்தனர்.
அந்த அதிகாரி கடந்த 27-ம் தேதி நேரில் சென்று பார்வையிட சென்றபோது இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிந்துரை செய்ய தாங்கள் எனக்கு 2000 ரூபாய் தரவேண்டும் என்று அவர் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் தாயார் அவரது மருமகன் சதீஷிடம் இது குறித்து கூற, அவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் நேரில் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை 2000 ரூபாய் நோட்டை அவன் கையில் கொடுக்கச் சொல்லி பின் கையும் களவுமாக ஷெரின் ஜாயை செய்ததது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.