உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தன்னை தானே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றிய தொகுப்பு
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவதனால் உடலில் செரிமானத்தை மெதுவாக்கி மற்றும் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
வாழைப்பழம்
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு அதிகப்படியான சக்தி கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருக்கும் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை ரத்தத்தில் இருந்து வெளியேற்ற முடியும்.
பெர்ரி
பெர்ரி பழங்களை சாப்பிடுவதனால் மனச்சோர்வு நீங்கி மன அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் வெளிவர முடியும். உடல் ஆரோக்கிய பாதிப்புக்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாக இருக்கிறது.
நட்ஸ்
முந்திரி பாதாம் வேர்க்கடலை போன்றவைகளை சாப்பிடுவதனால் உடலுக்கு ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிக அளவில் கிடைக்கப்பெறுகிறது.
கொழுப்பு நிறைந்த மீன்
மீன் வகைகளில் அதிக அளவு கொழுப்புகள் இருப்பதால் வாரத்தில் மூன்று முறை மீன் உணவு சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். அத்துடன் கண் பார்வைக் கோளாறுகளை சரிசெய்ய உதவும்.