பொதுத்தேர்வு அட்டவணை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழக முதல்வர் தேர்தலுக்கு முன் விவசாய கடன் தள்ளுபடி செய்து வழங்கியுள்ளார். குறைந்த மாணவர்கள் பயிலும் பள்ளியில் நூலகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. மாணவர்கள் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 5817 பேர் நீட் பயிற்சி பெற்று வருகின்றனர். எந்த மாநிலம் நீட் தேர்விற்காக இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேர்தல் தேதி வந்தவுடன் பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து வருகின்றது.முதல்வர் முடிவுகளை வெளியிடுவார் என்று அவர் கூறினார்.