Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் – விப்ரோ அறிவிப்பு!

விப்ரோ, அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் சார்பில் ரூ. 1,125 கோடி நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நிவாரண நிதியின் கீழ் ரூ. 1,125 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரசால் 38 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 21ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுசெய்ய பல்வேறு தரப்பினர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களிடம் நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர். அந்த வரிசையில் சச்சின், கங்குலி, ரெய்னா என பிரபலங்களை தொடர்ந்து தற்போது ரோஹித் ஷர்மாவும் இணைந்துள்ளார்.

அதில் ரூ. 45 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், ரூ. 25 லட்சத்தை மஹாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதிக்கும், ஸோமாட்டோ ஃபீடிங் இந்தியா நிறுவனம் மற்றும் தெரு நாய்களின் நலனுக்காகத் தலா ரூ. 5 லட்சத்தையும் வழங்கியுள்ளார். சானியா மிர்ஸா ரூ. 1.25 கோடியும், ரிலையன்ஸ் ரூ. 500 கோடியும் வழங்கியுள்ளது.

அதே போல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நிதியாக நெய்வேலி என்எல்சி சார்பில் ரூ.25 கோடி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் மார்க்கெட் சொசைட்டி சார்பில் ரூ.50 லட்ச நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் தமிழக ஆளுநர் மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ. 1 கோடி வீதம் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |