மகரம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகளை நிறைவேற்ற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறு நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழில் கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும்.
திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்திற்காக இன்று நீங்கள் பொருட்களை வாங்கக்கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்