அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன.
தென் இந்தியாவில், கடலோர சுற்றுலா தளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருப்பது புதுச்சேரி. வராலாற்று புகழும் பாரம்பரியமும் பெற்ற புதுச்சேரியை ‘ப்ரெஞ்ச் ரிவியெரா ஆப் தி ஈஸ்ட்’ என அழைப்பர். ஐரோப்பிய கலை வண்ணத்தினால் ஆன கட்டிடங்கள், ப்ரெஞ்சு வகை உணவுகள் ஆகியவற்றை காணலாம். சென்னை நகரத்திற்கு அருகில் இருப்பதால், வார இறுதியில் அதிக மக்கள் கூட்டத்தை காண முடியும். அமைதியான மனநிலைக்கு, அரபிந்தோ ஆசிரமம் அல்லது ஆரோவில், ஆழ்கடல் நீச்சல், கயாகிங், சர்ப்பிங் என புதுச்சேரியில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன.
மிஸ் செய்யக்கூடாத 9 விஷயங்கள் :
பிரஞ்சு காலனிகளை சுற்றிய சைக்கிள் பயணம்:
புதுச்சேரி நகரம், பிரஞ்சு காலனி, தமிழ் காலனி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு காலனிகளை சுற்றிப் பார்க்க, சைக்கிள் பயணமே சிறந்தது. பளிச்சென்ற சுவர்கள் எழுந்து நிற்க, பழைமை வாய்ந்த கட்டட கலைகள் காலனியெங்கும் பரந்து இருப்பதை காணலாம். அதுமட்டுமின்றி பிரஞ்சு காலனியில் இருக்கும் தேவாலயங்களுக்கும் செல்லலாம்.
ஆரோவில் பயணம்:
புதுச்சேரி நகரத்தில் புகழ்பெற்ற இடம் அரபிந்தோ அசிரமம் மற்றும் ஆரோவில். அமைதியான மனநிலைய மக்கள் அடைவதற்கான ஆசிரமங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளும், கருத்தரங்கமும், ஆரோவில்லில் நடைப்பெற்று கொண்டிருக்கும். ஆரோவில் சென்றால், சால்டிட்யூட் ஃபார்மில் கிடைக்கும் இயற்கை உணவுகளை ருசிக்க மறக்காதீர்கள்.
பாரடைஸ் கடற்கரைக்கான படகு பயணம்:
புதுச்சேரி கடற்கரைகளினுள், பாரடைஸ் கடற்கரை மிகவும் புகழ் பெற்ற ஒன்று. சுன்னம்பார் படகு இல்லத்திலிருந்து படகு மூலம், ப்ரிஸ்டைன் கடற்கரை வழியாக பாரடைஸ் கடற்கரை செல்லலாம். அதுமட்டுமின்றி, சூரிய அஸ்தமனம் ஆவதையும் கடற்கரையில் இருந்து காண ரம்மியமாக இருக்கும்.
கடலை ரசிக்க:
பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு பல ரிசார்டுகள், ஹோட்டல்கள் தங்குவதற்கு உள்ளன. அங்கிருந்து சிறப்பான சீ வீவ் கொண்ட இடங்களை தேர்வு செய்து ஓய்வெடுக்கலாம். தி ப்ரொமெனேட், பலெஸ் டீ மாஹே – CGH எர்த், லெ டுப்லெக்ஸ், வில்லா சாந்தி ஆகிய இடங்க்ளில் முன்பதிவு செய்து தங்கி கொள்ளலாம். அரபிந்தோ அசிரமத்தில் கூட, தங்குவதற்கான வசதிகள் உள்ளன.
கஃபே மற்றும் பார்:
கடற்கரைகள், உணவுகள் மட்டுமின்றி, புதுச்சேரியில் நிறைய கஃபேகள், பேக்கரிகள், பார்கள் உள்ளன. ருசியான காக்டெயில்கள் கிடைக்க கூடிய இடம். கஃபே கார்டே ப்ளான்சே, ரெட்டெஸ்வஸ் கஃபே, லே க்ளப், ல மேய்சன் ரோஸ், காஷா கி ஆஷா, கஃபே டெஸ் ஆர்ட்ஸ், பேக்கர் ஸ்ட்ரீத் ஆகியவை புகழ் பெற்ற இடங்கள்.
செரினிட்டி கடற்கரை சர்ஃபிங்:
ஆரோவில் அருகில் அமைந்திருக்கும் செரினிட்டி சர்ஃபிங் கடற்கரை, பல சாகச விளையாட்டுகளுக்கான இடமாக அமைந்திருக்கும். சர்ஃபிங், காயாகிங், பாய்மரப் படகு பயணம் ஆகியவை செய்யலாம்.
ஸ்கூபா டைவிங்:
சான்றிதழ் உடனான ஸ்கூபா டைவிங் பயிற்சி PADI மையம் வழங்குகிறது. தி மெரைந் ஸ்கூப் இன்னும் நிறைய சலுகைகள் வழங்குகின்றன. கிழக்கு கடற்கரையில் ஸ்கூபா டைவிங் செய்யக் கூடிய ஒரே இடமாக உள்ளது.
ஷாப்பிங்:
புதுச்சேரி சென்று சாப்பிங் செய்யாமல் திரும்ப முடியாது. கைவினை தோள் பொருட்கள், பீங்கான் பொருட்கள் (கிண்ணங்கள், தட்டு), கைவினை பேப்பர்கள் (டைரிகள், புத்தகங்கள்), சாக்லெட்டுகள், வெண்ணை ஆகியவை கண்டிப்பாக வாங்க வேண்டியவை ஆகும்.