உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது.
வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் பிபா உலகக் கோப்பை போட்டியை போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளுடன் சேர்ந்து நடத்த உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது, விளையாட்டு உலகை கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்று குறிப்பிட்ட இந்த நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பினுடைய தலைவர்கள் நம்புகிறார்கள்.