கொரோனா அச்சத்தில் பூனை மற்றும் நாய்களை விரட்டுபவர்கள் சரியான முட்டாள்கள் என ரஜினி பட நடிகை கோபமாக திட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி பல உயிர்கள் பலியானது. இதையடுத்து அமெரிக்காவில் பெண்புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் மக்கள் கொரோனா அச்சத்தில் வீடுகளில் வளர்க்கும் நாய் மற்றும் பூனைகளை வீதிகளில் விரட்டி விடுகிறார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
ரஜினியின் லிங்கா படத்தில் நடித்த இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா இதனை கண்டித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,” செல்ல பிராணிகளால் கொரோனா பரவுகிறது என நம்பி தங்கள் வளர்க்கும் பூனை மற்றும் நாய்களை வெளியில் விரட்டுபவர்கள் முட்டாள்கள். உங்களின் அறியாமையையும் மனிதாபிமானமற்ற செயலையும் கைவிடுங்கள். நாய்களிடம் இருந்து கொரோனா பரவுவதில்லை அதனால் உங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் அன்பு காட்டுங்கள்” என கூறியுள்ளார்.