Categories
உலக செய்திகள்

வீணாக்கப்படும் உணவுகள்…. பசியால் வாடும் மக்கள்…. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

உணவு வீணாக்கபடுவது குறித்து ஐ.நா சபை ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

உணவு வீணாக்கபடுவது குறித்து ஐநா ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுக்கு 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவது தெரிவித்துள்ளது. இந்த உலகில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பட்டினியால் இறந்து போகின்றனர். மேலும் உலக அளவில் மொத்தம் 93 கோடியே 10 லட்சம் டன் உணவு வீணாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் வீடுகளில் வீணாக்கப்படும் உணவுகள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு வீட்டில் ஆண்டுக்கு சராசரியாக ஐந்து கிலோ உணவை வீணாக்குகின்றனர். மேலும் சீனாவில் ஒரு வீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 60 கிலோ உணவை வீணாக்குகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் இது போன்று எதிர்காலத்தில் உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும் என்பதையும் ஐநா உணவு பாதுகாப்பு திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |