Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்க… நோய் தொற்றை தடுக்க…. இந்த உணவை சாப்பிடுங்க…!!

நோய் தொற்றால் மக்கள் அச்சப்பட்டு வரும் சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு

  • விட்டமின் சி அதிக அளவில் இருக்கும் நெல்லிக்காய், குடைமிளகாய் சேர்த்து சாலட் போல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
  • உணவில் தினமும் தக்காளி பழங்களை சேர்த்து வருவது தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும்.
  • மஞ்சள் கிருமி நாசினியாக விளங்கிவருகிறது. மஞ்சள் கலந்த உணவுப் பொருளை சாப்பிட்டு வருவதால் உடலில் தங்கியிருக்கும் பூச்சிகள், நச்சுக்கள் அழிந்துவிடும்.
  • இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 2 கிராம்  பூண்டு சாப்பிட்டு வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
  • துளசி இலைகளை பயன்படுத்தி டீ போட்டு குடிப்பதால் சுவாச கோளாறுகளில் இருந்து விடுபட முடியும்.
  • ரத்தத்தில் இருக்கும் நுண்கிருமிகளை அளிக்கும் குணம் அன்னாசி பூ விற்கு உள்ளது. எனவே அன்னாசிப் பூவை பொடியாக்கி டீ போட்டு குடித்து வருவது நன்மை விளைவிக்கும்.
  • உணவில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரிகிறது.
  • முருங்கைக்கீரையை உணவில் சேர்ப்பதன் மூலம் ரத்தத்தை சுத்தப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துணைபுரிகிறது.

Categories

Tech |