சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 300 ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மைதா, சமையல், எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக வழங்கி உள்ளனர். மேலும் கடந்த 14ஆம் தேதி முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் 18ம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு மொத்தம் 15 ஆயிரத்து 600 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.