Categories
அரசியல்

சென்னை வாசிகளே….. இனி உணவுக்கு பஞ்சமே கிடையாது…. சேவையில் இறங்கிய கோவில் நிர்வாகங்கள்….!!

சென்னையில் உள்ள பிரபல கோயில்களில் ஆதரவற்றோர்களுக்கும், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கும் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்புகளை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க மக்கள் வெளியே சென்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் முதியோர், வீடுகளின்றி தவிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில் இக்காலகட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உணவு வழங்கி உதவி வருகின்றனர்.

சிலர் மாநகராட்சிகளுக்கு பொருட்களாக கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், வடபழனி முருகன் கோவில் ஆகிய இடங்களில் 450க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து அதனை கோவில் நிர்வாகமே வினியோகம் செய்து வருகிறது. இவருடைய இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகள் கிட்டியுள்ளன.

Categories

Tech |