Categories
மாநில செய்திகள்

இனி துரித உணவுகள் விற்க தடை…… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

தமிழகத்தில் குழந்தைகளின் நலனை கருத்தில்கொண்டு துரித உணவுக்கு தடை விதிக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் பரிந்துரை செய்துள்ளது.

உணவே மருந்து என்று வாழ்ந்து கொண்டிருந்த நாம் இன்று மருந்தே உணவு என்ற சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். இயற்கையான பழம் காய்கறிகளை உண்டு உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்த காலம்போய் துரித உணவிற்கு அடிமையாகி அதுவே நமது உணவு கலாச்சாரமாக மாறிவிட்டது. இந்த துரித உணவுகளை அதிவிரைவாக அமைக்கப்படுவதால் அதில் பல்வேறு கெமிக்கல்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பதாலும்,

Image result for துரித உணவுகள்

அது குழந்தைகளை பெரியவர்களைவிட குழந்தைகளை எளிதில் பாதித்து விடும். ஆகையால் குழந்தைகளை துரித உணவுகளில் இருந்து பாதுகாக்க பள்ளி வளாகங்களிலும், பள்ளி வளாகத்தை சுற்றி 50 கிலோ மீட்டர் தொலைவிலும் எந்த வகையான துரித உணவுகளையும் விற்க தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளை துரித உணவு வியாபாரிகள் மத்தியில் கருத்து கேட்ட பின் இறுதி பரிசீலனை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.

Categories

Tech |