உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சசிகுமார், பொன்ராஜ், ஜஸ்டின் அமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் நோயுற்ற கோழிகள் மற்றும் ஆடுகள் வெட்டி விற்கப்படுகிறதா அல்லது கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இறைச்சி கடை நடத்தும் உரிமம் பெற்றுள்ளனரா மற்றும் இறைச்சி விற்கும் இடங்கள் சுகாதாரமாக இருக்கிறதா போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் 5 கிலோவும் தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் 3 கிலோவும் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.