குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு
குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுக்கும் பொழுது நீ இதை கண்டிப்பாக சாப்பிட்டே தீர வேண்டும் என கட்டாயப்படுத்துவதை காட்டிலும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் அந்த உணவை சாப்பிட்டு அவர்களுக்கும் பழக்கப்படுத்தி விடுவது சிறந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக அவர்களது மெனுவில் இடம்பெற வேண்டிய அத்தியாவசியமான 4 உணவு வகைகள் உள்ளது. அவை
பருப்பு வகைகள்
நாம் அன்றாடம் மளிகை லிஸ்டில் எழுதும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு என அனைத்து பருப்பு வகைகளும் குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கக்கூடிய ஒன்றே. கூடுதலாக மொச்சை, பட்டாணி போன்று வித்யாசமாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தினமும் ஏதேனும் ஒரு பருப்பு வகைகளை கொடுப்பது அவசியம். தனியாக அவித்தோ அல்லது வறுத்தோ எப்படி வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். இது புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் ஆகும்.
கீரைகள்
குழந்தைகளின் உடலை வளம் பெறச் செய்ய உதவக்கூடியது கீரைகள். பலவகையான கீரைகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. அதில் உண்ணக்கூடிய கீரைகள் மட்டுமே 60 வகைகள் இருக்கிறது. குழந்தைகளுக்கு எந்த வகை கீரைகள் பிடிக்குமோ அந்த வகைகளை தினம் ஒன்றாக வாரம் முழுவதும் கீரை வகைகளை பொரித்தோ அல்லது மசித்தோ உண்ண கொடுக்கலாம்.
வால்நட்
வால்நட் வடிவமே மனித மூளை போன்றதுதான். ஒரு கைப்பிடி அளவு வால்நட் 2.6 கிராம் ஒமேகா சத்து நிரம்பியுள்ளது. இது குழந்தைகளின் மூளைத்திறனை அதிகரிக்க உதவி புரிவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இதயத்தின் செயல்பாட்டை சீரமைக்கவும் பங்காற்றுகிறது. அனைத்தையும் விட வால்நட்டில் இருக்கும் மெலட்டோனின் குழந்தைகளின் ஆரோக்கியமான தூக்கத்திற்கும் சான்றாககும்.
ப்ளூபெர்ரி
பாலிஃபீனால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த ப்ளூபெர்ரி ரத்த நாளங்களை பாதுகாத்து வீக்கம் இருந்தால் சரி செய்ய உதவி புரிகிறது. அதோடு இதனைச் சாப்பிட்டு வருவதால் டியூமர் செல்கள் உருவாவதை தடுக்கவும் முடிகிறது. குழந்தைகளின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பழவகைகளில் இதற்கு முக்கிய இடம் உள்ளது.