ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கீரை வகைகளில் நாம் அரிதாக கேட்கும் பெயர் பசலைக் கீரை. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பும் அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் தன்மை கொண்டது.
வல்லாரைக்கீரை ஞாபக சக்தியை கொடுக்க கூடியது. மேலும் உடலுக்கு பல்வேறு சக்திகளை வழங்குகிறது. மாம்பழம் உண்டால் இருதயம் வலிமை பெறும். திராட்சை வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சரியாக்கும். சமையலுக்கு பயன்படுத்தும் சின்ன வெங்காயம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் சின்ன வெங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.