சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸுடன் இன்று உலக அளவில் மனித இனம் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்த கொரோனாவுக்கு பின் தங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
மேலும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடிய மற்றொரு உணவு முறை டீடாக்ஸ் உணவு முறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உடலில் உள்ள நச்சுக்களை போக்குவதே டீடாக்ஸ் உணவு முறை. நமது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
டீடாக்ஸ் உணவு முறையில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற, இனிப்புகளை தவிர்ப்பது, கீரை, காய்கறிகள், சிட்ரஸ் உணவுகளை அதிகம் எடுப்பது, நீர் சத்து, நார்சத்து, வைட்டமின் உணவுகளை எடுப்பது ஆகியவை இந்த உணவு முறைகளில் அடங்கும்.