இயக்குனர் செல்வராகவன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் வில்லனாகவும், சாணி காகிதம், திரௌபதி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனும் அடுத்ததாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜித்தன் ரமேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.