நடிகர் பிரபாஸ் தற்போது நடிக்கும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகராக பிரபாஸ் திகழ்கிறார். தற்போது இவர் பல மொழி படங்களில் நடிக்கிறார். பல கோடி செலவில் எடுக்கப்படும் “அடிபுருஷ்” என்ற படத்தில் தற்போது நடிக்க உள்ளார். இதன் போஸ்டரை பார்க்கும்போது ராமாயணம் கதையை பிரபாஸ் படமாக நடிக்க உள்ளார் என தெரிகிறது.
சமீபத்தில் வெளியாகி 150 கோடி வசூல் சாதனை செய்த “காஞ்சி” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இந்தியா முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. பிரபாஸ் நடித்து வரும் அனைத்து படங்களும் பழமொழிகளில் எடுக்கப்படும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.