ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக பாடுபட வேண்டிய அவசியமில்லை. இம்மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது.
பாலிதீனை கைவிடு துணிப்பையை கையில் எடு
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும். இவை எளிதில் மக்காமல் நீண்ட நாட்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் எளிதில் மக்கக்கூடிய துணி, காகிதம், ஓலை, நார் போன்றவற்றால் ஆன பைகளை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படுகிறது.
நடப்பதும் மிதிப்பதும் உலகுக்கும் நமக்கும் நன்று
வாகனங்கள் விடும் புகையால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதால் அவற்றின் பயன்பாட்டை குறைத்து எங்கு சென்றாலும் வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து குறைந்த தூரம் செல்ல நடந்தும் மிதிவண்டியையும் பயன்படுத்தலாம்.
அவசிய தேவைக்கே அனாவசிய செலவுக்கு அல்ல
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனும் ஆண்டிற்கு சுமார் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை வீணாக செலவழிக்கிறார். இதனை போக்க தண்ணீர் சிக்கனம் அவசியம்.
போதிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாததால் வெகுவிரைவிலேயே உலகம் குப்பை மேடாக மாறிப் போகும் என்பதில் சந்தேகமில்லை. மரங்கள் வளர்ப்பது மழைநீர் சேமிப்பு ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழலை ஓரளவுக்கு பாதுகாக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாக்கும் களப்பணிகளை நம்மிலிருந்து துவக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.