Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகளவு பனிமூட்டம்…. பாதிக்கப்பட்ட சேவை…. திருப்பி விடப்பட்ட விமானங்கள்…!!

அதிகளவு பனி மூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது. 

சென்னை மாவட்டத்தில் அதிகாலை முதலே பனிமூட்டமானது அதிகமாக காணப்பட்ட காரணத்தால் புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்ள ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சென்னை விமான நிலையத்திலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் மதுரை, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, திருச்சி, புவனேஸ்வர் பெங்களூரு கொல்கத்தா விசாகப்பட்டினம் தூத்துக்குடி கௌஹாத்தி கோவை கொச்சி, திருவனந்தபுரம், சீரடி, ஹூப்ளி ஆகிய நகரங்களுக்கு சென்னையிலிருந்து செல்லக்கூடிய  38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. அதோடு மற்ற நகரங்களிலிருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் இந்த பனிமூட்டம் காரணமாக சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக தரை இறங்கின.

இதனையடுத்து சென்னைக்கு வந்த டெல்லி, துபாய், அந்தமான், பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் தரை இறங்க சிரமப் பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டது. அதன் பின் காலை 6 மணிக்கு பனிமூட்டம் குறைந்ததால் சென்னை விமான சேவை சீராக உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |