Categories
உலக செய்திகள்

ஸ்மார்ட் ஃபோன் உலகில் கொடிகட்டி பறக்கும்; மிக முக்கிய பிரபலம் காலமானார்!

ஸ்மார்ட்போன், டிவிகளுக்கு உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங்  உருவாக்கிய லீ பைங் சல்-ன் மகனும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவருமான  லீ குன் ஹீ (78) இன்று காலை காலமானார். இறப்புக்கான காரணம் அறிவிக்கவில்லை.

தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு லீ குன் ஹீ அதன் பொறுப்பை ஏற்றார். இவரது தலைமைக்கு பின்னர் சாம்சங் தொழில்நுட்ப உலகில் அதீத வளர்ச்சி அடைந்தது. தென்கொரியாவில் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் சாம்சங் மிகப் பெரியது. யுத்தத்தால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து உலகின் 12 வது மிகப் பெரிய பொருளாதாரத்திற்கு தென்கொரியாவை உயர்த்தியதில் சாம்சங் முக்கிய பங்கு வகிக்கிறது. திரைமறைவு அரசியல் உறவுகள் மற்றும் போட்டியாளர்களை வளரவிடாமல் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டுகள் சாம்சங் நிறுவனர் லீ மீது உள்ளது. 1996-ம் ஆண்டு தென்கொரியா நாட்டின் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அந்த குற்றச்சாட்டில் அவர் மன்னிக்க பட்டார். அவர் மீதான வரி ஏய்ப்பு குற்றமும் உறுதிசெய்யப்பட்டது.

ஒரு தனித்துவமான வாழ்க்கை முறைக்கு அறியப்பட்ட லீ குன் ஹீ, 2014 ஆம் ஆண்டு மாரடைப்பால் படுக்கையில் இருந்தார்.  அவரது இறுதி நாட்களில் கூட மர்மமே நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை சாம்சங் நிறுவனம், லீ குன் ஹீ  உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மரணத்திற்கு பிரபலங்கள் தொழிலதிபர்களின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |