Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படையினர் அதிரடி சோதனை..! 73 கிலோ நகைகள் பறிமுதல்…!!

சேலம் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில்  73 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது. 

மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தமிழக முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம்  கொட்லாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக சோதனை செய்தனர்.  பின்னர் கடைசியாக வந்த வேன் ஒன்றை தடுத்து  நிறுத்தி சோதனை செய்தபோது  அந்தவேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் நகைகள் கொண்டு வந்தனர்.

Image result for பறக்கும் படையினர் அதிரடி சோதனை..!

மேலும் இந்த சோதனையில் நகைகள் அனைத்தும் மும்பையிலிருந்து ராமநாதபுரம் ,மதுரை மற்றும் தூத்துக்குடிகளிலுள்ள கடைகளுக்கு நகைகள் கொண்டு செல்லப்படுவதாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அதற்கான உரிய ஆவணங்களை  காண்பித்தனர்.எனினும் நகைகள் மற்றும் அதற்கான ஆவணங்களை  கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை வருமான வரித்துறை அதிகாரியினரிடம் ஒப்படைத்தனர்.ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த பின் அவற்றின் ஆவணங்கள் உண்மை என்பது உறுதி செய்த பின்னரே உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி  தெரிவித்தார்.

Categories

Tech |