தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில இடங்களில் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேட்டூர் அணையில் நீர் கொள்மட்ட அளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதும் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்துள்ளார்மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.