நேற்று முன்தினம் நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நேபாளத்தில் உள்ள இந்திரவதி மற்றும் மேலம்ஷி ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெள்ள நீரானது சிந்துபல்சவுக் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் புகுந்துள்ளதால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுவரை 7 பேர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் 20 பேர் அந்த வெள்ள நீரில் மாயமானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 நபர்களில் மூன்று பேர் சீனர்கள், மூன்று பேர் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த 20 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.