ஜெர்மன் நாட்டில் மழை வெள்ளமும் அதனால் உருவான நிலச்சரிவும் மக்கள் உயிரிழப்புகளை அதிகமாக்கி வருகிறது.
ஜெர்மனில் மூன்று மாதங்களுக்கு பொழியக்கூடிய மழை, 3 மணி நேரத்தில் கொட்டி தள்ளியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 1300 நபர்கள் மாயமாகியுள்ளனர். சாலைகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.
Cologne-வில் பல்வேறு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. எனவே அப்பகுதியில் வசித்த 55 நபர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து, North Rhine-Westphalia மாகாண கேபினட் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் ஸ்லோவாகியா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் பாதிப்படைந்த ஜெர்மன் நாட்டு மக்களுக்கு உதவி வருவதாக ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn கூறியிருக்கிறார்.