Categories
Tech டெக்னாலஜி

FLIPKART BIGG BILLION DAYS SALE: “POCO” ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்கள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம். அதன்படி பிரபலமான Poco நிறுவனத்தின் x series, f series, M series ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் போன்றவைகளின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் உடனடியாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

இந்நிலையில் Poco போன்களின் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி poco x4 pro 5G ஸ்மார்ட்போனை 13 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த போனுக்கு 4000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள நிலையில், 120 HZ super amoled screen Snapdragon 695 soc செயலிகளைக் கொண்டுள்ளது. அதன்பிறகு 67W fast charging உடன் 5000mAh பேட்டரி வசதியும் இருக்கிறது. இதனையடுத்து Poco f4 5g 6000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் 21,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிரகன் 870 SOC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 4700 mAh  பேட்டரி வசதியுடன், 67w சார்ஜிங் வசதியும் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து Poco M4 Pro 5G ஸ்மார்ட் ஃபோனை தள்ளுபடி விலையில் 11,499 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த போனில் MediaTek dimensity 810 soc சிப்செட் வசதியும், 5000 mAh பேட்டரியுடன், 33w சார்ஜரும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் Poco M5 MediaTek helio G99 Soc ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் 10,999 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம்.

Categories

Tech |