Categories
தேசிய செய்திகள்

எந்த பொருள் ஆர்டர் செய்தாலும்…. 90 நிமிடத்தில் டெலிவரி….. பிளிப்கார்ட் நிறுவனம் அதிரடி….!!

வாடிக்கையாளர்கள் எந்த பொருளை ஆர்டர் செய்தாலும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு வழங்கும் சேவையை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தை பொறுத்தவரையில் மிகப் பெரிய போட்டியானது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட், ஈஸி ஷாப்பிங், ஷாப் க்ளுஸ் என ஏராளமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் புதுப்புது ஆஃபர்களை அள்ளிக் கொடுத்து தங்களது வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்களுக்கான மதிப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய வர்த்தகப் போட்டி நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் இவை இரண்டும் தங்களது வாடிக்கையாளர்களை கவர புது புது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளிப்கார்ட் குயிக் என்னும் சேவையை தொடங்கி இருப்பதாகவும், இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் எதுவாயினும் அதனை 90 நிமிடங்களில் அவர்களுக்கு டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சேவை தற்போது பெங்களூருயில் மட்டும் சோதனைக்காக நடத்தப்பட்டு வரும் நிலையில், விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |