Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மகாராணியாரின் இறுதி அஞ்சலி… 30 நிமிடங்களுக்கு விமானங்கள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

பிரிட்டன் மகாராணியரின் இறுதிச்சடங்கில், இரைச்சல் தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக, பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் மகாராணியார், இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரின் உடல் லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் அரச மரியாததை மற்றும் கிரீடத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. நாளை அதிகாலை வரை, அங்கு வைக்கப்பட்டிருக்கும். மகாராணியின் இறுதிச் சடங்கு நடக்கும் போது, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குச் செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து புறப்படக்கூடிய மொத்த விமானங்களும் ரத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணிக்கு மரியாதை செலுத்த விமானங்கள் ரத்தாகியிருக்கின்றன. இறுதி ஊர்வலத்தில்  கடைசியாக 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும். அப்போது, இரைச்சல் தொந்தரவுகளை தவிர்க்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் காலை 11:40 முதல் 12:10 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் எந்த விமானமும் இயங்காது.

இதற்காக, விமான நிலையம் முன்பே பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

Categories

Tech |