தன் கணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டாலும் குடும்பங்கள் ஒன்றிணைந்த சம்பவம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது சாலையில் விமானம் விழுந்து வெடித்ததில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தின் பைலட் உயிர்தப்பிய தோடு தண்டனையில் இருந்தும் தப்பித்தார். இச்சம்பவத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஒரு நிகச்சி நடந்துள்ளது. அந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் ஒருவர் டேன்யா ஹெவ்ஸ்டோன்.
இவரின் முன்னாள் கணவனான டானியல்பொலிடோ, சோரெஹம் எனும் பகுதியில் அந்த சாகச நிகழ்ச்சி நடக்கும் பொழுது மேற்கு சசெக்சில் உள்ள சாலையில் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது விமானம் விழுந்து வெடித்து சிதறியதில் அந்த இடமே தீப்பிழம்பாய் காட்சியளித்தது. டேனியல் உட்பட 11 பேர் சாம்பலாகினர். அச்சம்பவம் தன்மகன் ஜோர்ஜியவை பயங்கரமாக பாதித்தாக டேன்யா தெரிவித்தார். அப்பா இறந்தது தெரியாமல் எப்பொழுதுமே அப்பா எவ்வளவு உயரமாக இருப்பார், நான் அப்பாவை போல் உயரமாக இருக்கிறேன் அப்பாவைப் போல் வேடிக்கையாக இருக்கிறேன் எனக் கூறுவதும் ஆக இருந்தான்.
இதற்கிடையில் கணவனை இழந்த டேன்யாவிற்கும் அப்பாவை இழந்த ஜோர்ஜியவிற்கும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. டானியல் இறப்பதற்கு பத்து மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்துசென்றுவிட்டார். மேலும் டானியல் இறந்து சில நாட்களுக்குப்பின் டேன்யாவிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை அனுப்பியவர் ஜோகினா பிரவுன் என்ற இளம்பெண். டேனியாவை பிரிந்தபின் டேனியல் அந்தப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்தான் டேனியாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்.
அதில் “டானியலின் கருவை தான் சுமந்து கொண்டிருப்பதாக பிரவுன் தெரிவித்திருந்தார்.” உடனே டேன்யாவும் அவரது மகனும் அவரை சந்திக்க சென்றனர். இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட அவருக்குப் பிறந்த குழந்தையும் ஜோர்ஜியவும் நெருக்கமாகி விட்டனர். அவர்கள் இருவரின் கணவன் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டாலும், குடும்பங்களுக்குள் ஒன்றாகி உள்ளனர் என்று ஆறுதல் மட்டும் மிஞ்சியுள்ளது.