Categories
உலக செய்திகள்

மலையில் மோதி நொறுங்கிய விமானம்.. 19 பேரின் உடல்கள் மீட்பு.. மீதி பேரின் கதி என்ன..?

ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி என்ற நகரத்திலிருந்து, ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம், நேற்று முன்தினம் பலானா நகரத்திற்கு சென்றிருக்கிறது. அதில் பலானா நகரத்தின் மேயரான ஓல்கா மொகிரோ மற்றும் 27 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

ரேடார் பார்வையிலும் காணாமல் போனது. எனவே விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பின்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டது. எனவே விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இதனால் அதிலிருந்த 28 பேரும் பலியாகியிருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் அந்த விமானம் விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் ஒரு மலையில் மோதி நொறுங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 19 நபர்களின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களின் உடல்களை மீட்பு குழுவினர் தேடி வருகிறார்கள்.

Categories

Tech |