சமூக இடைவெளியுடன் விமானத்தில் பயணம் செய்யும் முறையை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊராடங்கிற்கு பின் அனைத்து போக்குவரத்து சேவைகளும் சமூக இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி உத்தரவிட்டு உள்ளது.
விமானத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் திட்டத்தை விமான நிறுவனங்கள் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விமானத்தில் ஒரு சீட்டு காலியாக விடுவதால் 78 அங்குலம் இடைவெளி கிடைக்கிறது. இதனால் மூன்றில் ஒரு பங்கு சீட்டில் தான் பயணிகள் அமர முடியும். இதன் மூலம் டிக்கெட் விலை மூன்று மடங்கு உயருமே தவிர பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது என தெரிவித்துள்ளனர்.